நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரின் மனைவி லட்சுமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஹரிஹரன், தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவத்தன்று நடந்த தகராறில் லட்சுமியின் தலையில் கல்லை வைத்து அடித்துள்ளார். அக்கபக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்துள்ளார். அடித்துவிட்டு போதையில் தூங்கிய ஹரிஹரன் காலையில் மனைவியை காணவில்லை என தேடியுள்ளார். பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.