கிருஷ்ண ஜெயந்தி நாளில் இறைச்சி மற்றும் மது அருந்த கூடாது. இந்த நாளில் எந்த ஒரு பக்தரும் துளசி இலைகளை வெட்டக்கூடாது. ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி அன்று யாரையும் அவமதிக்க கூடாது. தூய்மையான மனதுடன் கிருஷ்ணரை வழிபட வேண்டும். இன்று மரங்களை வெட்டுவது பாவமாக கருதப்படுகிறது. குறிப்பாக புதுமணத் தம்பதிகள் மரம், செடிகளை வெட்டக் கூடாது. பசுக்கள் மற்றும் கன்றுகள் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தவை. பசுக்களை அவமரியாதை செய்தால் கடவுள் கோபப்படுவார் என நம்பப்படுகிறது.