மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி ஷம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் நிர்வாணமாக சுற்றி வரும் வீடியோ வைரலாகி வருகிறது. மது போதையில் டாக்டர் இதை செய்ததாக தெரிகிறது. மருத்துவர் மது மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அவுரங்காபாத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பிட்கினில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் பணிபுரிகிறார். அவர் ஆடையின்றி மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரியும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.