மக்களவைக்கு புதிதாக இந்த முறை எத்தனை பேர் தெரியுமா?

67பார்த்தது
மக்களவைக்கு புதிதாக இந்த முறை எத்தனை பேர் தெரியுமா?
18வது மக்களவைக்கு இந்த முறை 280 பேர் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் முன்னாள் முதல்வர்கள், சினிமா நடிகர்கள், அரசியல் ஆர்வலர்கள், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியோர் அடங்குவர். உத்தரப்பிரதேசத்தில் இருந்து 45 பேர் முதல் முறையாக மக்களவைக்குள் நுழைகின்றனர். அவர்களில் தொலைக்காட்சி பிரமுகர் அருண்கோவில், காங்கிரஸ் தலைவர் கிஷோரிலால் சர்மா மற்றும் தலித் உரிமை ஆர்வலர் சந்திரசேகர் ஆசாத் ஆகியோர் அடங்குவர். 33 பேர் மகாராஷ்டிராவிலிருந்து புதிய எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி