கள்ளக்குறிச்சி தச்சூரில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு நவ., 08 இரவு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, தச்சூரைச் சேர்ந்த காமராஜ் (25) என்று தெரிந்தது. சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் காமராஜ், பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார். காதலுக்கு பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். மனவிரக்தியில் இருந்த அவர் விளைநிலத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது.