நடிகர் டெல்லி கணேஷ் மறைவு - விஜய் இரங்கல்

52பார்த்தது
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு - விஜய் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், மூத்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி