டெங்குவை ஒழிக்க ‘மாஸ் கிளினீங்’ பண்ணுங்க - சுகாதாரத்துறை

70பார்த்தது
டெங்குவை ஒழிக்க ‘மாஸ் கிளினீங்’ பண்ணுங்க - சுகாதாரத்துறை
இன்று(மே 16) தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் ‘மாஸ் கிளீனிங்’ செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் பெய்து வரும் கோடை மழையால் பல பகுதிகளில் நீர் தேங்க துவங்கி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு டெங்கு தடுப்பு பணிகளை தற்போதே துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களை சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை ஒரே கட்டத்தில் ஒழிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி