வேடசந்தூர்: பெண் போலீசின் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்

52பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் நித்தியா ( வயது 35). தந்தை சௌந்தர்ராஜன் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் சரஸ்வதி ( வயது 63). நித்யாவிற்கு மாரியம்மாள், விஜயலக்ஷ்மி, என்ற இரண்டு அக்காக்களும், ஜெயபாலன் என்ற அண்ணனும் உள்ளார். நித்தியா பள்ளி படிப்பில் இருந்து காவல் துறையில் பணிபுரிய வேண்டுமென லட்சியத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு வரை வேடசந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். பின்பு பி. ஏ. தமிழ் இலக்கியம் திண்டுக்கல்லில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் படித்து முடித்துள்ளார். காவல்துறையில் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். தனது தந்தை இறந்த பிறகு அக்காக்கள் மற்றும் அண்ணன் அவர்களது குடும்பத்தை தந்தை ஸ்தானத்தில் இருந்து கவனித்து வந்துள்ளார். காவல்துறையில் பணியாற்றியபோது 2016ஆம் ஆண்டு தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இந்த நிலையில் சென்னையில் பணியாற்றி வந்த நித்தியா இருசக்கர வாகன விபத்தில் சிக்கி பலியானார். இவரது உடல் செவ்வாய்க்கிழமை காலை 9. 30 மணி அளவில் சொந்த ஊரில் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நித்தியா உயிரிழந்த சம்பவம் வேடசந்தூர், கொசவபட்டி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி