பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோரிடம் ஆசிபெற்ற உதயநிதி

61பார்த்தது
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.27) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், தனது பெற்றோரை சந்தித்து ஆசிபெற்றார். தொடர்ந்து, அங்கிருந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில், தனது பிறந்தநாளை ஒட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார். உதயநிதி பிறந்தநாளை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முன்னதாக தனது பிறந்தநாளுக்கு பேனர் வைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு உதயநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நன்றி: கலைஞர் டிவி

தொடர்புடைய செய்தி