தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2004-ல் திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிய முடிவு செய்து பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து பரஸ்பரம் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக நவ. 21-ல் தெரிவித்தனர். இந்த வழக்கில் இன்று (நவ. 27) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.