இந்தியாவில் அதிக மக்கள் தொகை காரணமாக தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போர் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் அதிகப்படியான தண்ணீர் தேவை காரணமாக பூமியின் சுழலும் அச்சு 31.5 அங்குலம் அளவிற்கு சாய்ந்து இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அச்சு சாய்வு காரணமாக பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.