அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலை நடத்திய ஆய்வில், உடலில் 19 இடங்களில் ஏற்படும் புற்றுநோய்களை ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள் கட்டுப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டன் மருத்துவ ஆய்வகத்திலிருந்து 2,58,138 பேரின் மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த போது, ஒமேகா 3,6 குறைவாக இருந்தவர்களுக்கு புற்றுநோய் இருந்தது தெரியவந்தது. ஒமேகா 6 கொழுப்பை ஆண்கள் தினமும் 17 கிராமும், பெண்கள் 12 கிராமும் எடுத்துக் கொள்ள விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.