திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு முப்பது மணி அளவில் புகார் அளிக்கப்பட்டது. அதில் தங்களது கட்சி தலைவரையும் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அவதூறாக பேசிய பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச். ராஜா மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது.