நாகல் நகர் சாயப்பட்டறைகளில் திடீர் ஆய்வு

5341பார்த்தது
திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் சாயப்பட்டறைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அவர்களுடைய உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் கீர்த்திகா, திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் நாகல் நகரில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் ஆறு சாயப்பட்டறை ஆலைகளை சிறு தொழில்களாக செய்து அவற்றின் கழிவு நீர்களை முறைப்படி மாநகராட்சி அனுமதி இல்லாமல் மாநகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயில் விடப்படுவது தெரியவந்தது.

இதனை அடுத்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் உத்தரவின் படி வியாழக்கிழமையான நேற்று மதியம் 1. 30 மணியளவில் ஆய்வு செய்து அனைவருக்கும் உடனடியாக சாயக்கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் விடும் நபர்களை எச்சரித்து நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டது. மீறி சாயக்கழிவுகளை கால்வாயில் விடுபவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்து அவர்களுடைய மின் இணைப்பை துண்டிக்க துரித நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி