திண்டுக்கல், வடமதுரை அருகே மலைபட்டியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் குத்து விளக்கினை ஏற்றி வேடசந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் துவங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிவிட்டு வெளியே வரும்போது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு எம்எல்ஏ. காந்திராஜன் பதில் அளிக்காமல் காரில் சென்று விட்டார்.
பின்னர் அதே பகுதியில் இருந்த திமுக பிரமுகர் கேள்வி கேட்ட பொதுமக்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.