திண்டுக்கல்: திடீர் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி

2225பார்த்தது
திண்டுக்கல் பேகம்பூர், மேட்டுப்பட்டி பகுதியில் திடீர் சாரல் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி.

திண்டுக்கல்லில் கடந்த ஆறு மாதத்துக்கு பின்பு திடீர் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் கடந்த ஆறு மாதத்திற்கு பின்பு இன்று மழை பெய்தது மக்களிடம் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்லில் தீபாவளிக்கு முன்பு மழை இல்லாமல் கடந்த ஆறு மாதமாக வறண்ட வானிலையே நிலவியது. இதனால் வெப்பம் கடுமையாக இருந்து தான் இரவில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் காலை 11: 00 மணிக்கே வெளியே செல்ல முடியாமலும் 4 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

கடந்த மூன்று நாட்களாக வெப்பம் 100 டிகிரியை தாண்டியதால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வந்தனர். வெப்பம் அதிகரித்ததால் கொடைக்கானல் சிறுமலை உட்பட இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிகிறது. இவற்றை அணைக்க முடியாமல் வனத்துறையினர் தொடர்ந்து திணறி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தந்தாலும் சிறிதளவு மழையால் வெப்பம் அதிகரித்தது.

தொடர்புடைய செய்தி