திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி எம்பி வெற்றி பெற்றவுடன் பாதாள செம்பு முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் 4 இலட்சத்து 43 ஆயிரத்து 821 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டி அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக காவல் தெய்வமான சங்கிலிக் கருப்பை வணங்கிவிட்டு பாதாள செம்பு முருகன் ஆசி பெற்றார். திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி எம்பி சச்சிதானந்தம். நாடாளுமன்றத் தொகுதி எம்பிக்கு பாதாள செம்பு முருகன் கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெற்றி பெற்ற எம்பி சச்சிதானந்தத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தோடு ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.