திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன் பட்டியை சேர்ந்த விவசாயி கோதண்டம். இவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி தண்ணீர் உள்ளது. கோதண்டத்திற்கு சொந்தமான 40 ஆயிரம் மதிப்புள்ள பசு மாடு கிணற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்த நிலைய அதிகாரி ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் ராஜகுபேரன் விப்பின் ஜோதி பாண்டியராஜன் விஜய் ராஜா ராம் எட்டையா ஆகிய வீரர்கள் கயிறு மூலம் பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.