திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம் அருகே உள்ள குளத் துப்பாளையத்தை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மனைவி கருப்பாத்தாள் (வயது 60). இவர் கொழுமம்-குளத்துப் பாளையம் சாலையில் என். ஜி. புதூரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி, அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பாத்தாள் சம்பவ இடத்தி லேயே இறந்தார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கருப்பாத்தாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பழனி அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைத் தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து ஏற் படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி கருப்பாத்தாளின் உறவி னர்கள் பழனி அரசு ஆஸ்பத் திரியில் போராட்டம் செய்ய முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்ட தையடுத்து அவர்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர்