பங்குனி உத்திர நான்காம் நாளான திருவிழா

72பார்த்தது
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5 ம் தேதி திரு ஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆறாம் நாளான வருகின்ற பத்தாம் தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி , தெய்வானை திருக்கல்யாண வைபவமும் பதினொன்றாம் தேதி ஏழாம் திருவிழாவான அன்று மாலை 4: 30 மணிக்கு திரு தேரோட்டமும் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று பங்குனி உத்திர திருவிழா நான்காம் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலப் பாதையில் தீர்த்த காவடிகளை எடுத்து வந்து குவிந்து வருகின்றனர். மேலும் படிப்பாதை , யானை பாதையில் பக்தர்கள் சென்று வருகின்றனர். மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்று சுமார் மூன்று மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு தங்கமயில் வாகனத்தில் முருகபெருமான் வலம் வந்த காட்சி தருவர். மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி