பழனி: சமுதாய வளைகாப்பு விழா

551பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவினை சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சேலை பழங்கள் வளையல்கள் உள்ளிட்ட சீர் வரிசைகள் வழங்கப்பட்டன. தாலிக்கு தங்கம் வேண்டி விண்ணப்பித்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தங்கக் காசும் அவரவர் வங்கிக் கணக்கில் 25000 ரொக்க பணமும் செலுத்தப்பட்டது. பின்னர் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் அறுசுவை உணவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி