கமிஷன் மண்டியை புறக்கணித்த விவசாயிகள்

1885பார்த்தது
கமிஷன் மண்டியை புறக்கணித்த விவசாயிகள்
பழநி இட்டேரி ரோடு பகுதியில் நகராட்சி கட்டுப்பாட்டில் காய்கனி கமிஷன் மண்டி கடைகள் செயல்பட்டு வருகிறது. வாகனத்திற்கு ரூ. 25 சுங்க கட்டணமாக பெற்று வந்த நிலையில் ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு மூடை , பெட்டிக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர டூவீலர், டிராக்டர், மாட்டு வண்டிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு வாகனத்திற்கு ரூ. 300 முதல் ரூ 500 வரை செலுத்த வேண்டியுள்ளதால் வாகன ஓட்டுனர் , விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதாக கூறி , நேற்று முன் தினம் கமிஷன் மண்டி வளாகம் முன்பு வாகனங்களை நிறுத்தி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதனம் செய்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று விவசாயிகள் , வாகன ஓட்டுநர்கள் கமிஷன் மண்டியை புறக்கணித்து ஜவகர் நகர் தனியார் நிலத்தில் காய்கறிகளை ஏலம் விட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி