பழனி: சன்னதி வீதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு

64பார்த்தது
பழனி முருகன் கோயிலுக்கு பங்குனி உத்திர திருவிழா துவங்கியிருந்து தமிழகம் முழுவதும் பக்தர்கள் பரவலாக வந்து உள்ளனர். பழனி வரும் பக்தர்கள் திருவாவினன்குடி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்கின்றனர். 

திருவாவினன்குடி கோவிலில் இருந்து சன்னதி வீதி வரையிலுள்ள சாலையில் இரண்டு புறமும் உள்ள கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையின் நடுவே சிலர் கொய்யாப்பழம், பொம்மைகள், சாமிபடங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து பக்தர்களை வாங்க கட்டாயப்படுத்தி தொந்தரவு செய்கின்றனர். 

கிரிவலம் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகற்றப்பட்டதால் சன்னதி வீதி சாலையை முழுமையாக வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டனர். தற்போது சன்னதி வீதியில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

நகராட்சி நிர்வாகம், தேவஸ்தான நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து சன்னதி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி