புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் விழா

557பார்த்தது
புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் விழா
ஒட்டன்சத்திரம்: ''பொங்கலுக்கு 15 வகை கலரில் சேலைகள், 5 வகை கலரில் வேட்டிகள் வழங்கப்பட உள்ளதாக'' அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதியில் ரூ. 7. 60 கோடியில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த அவர் பேசியதாவது: 30 மாதங்களில் 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் குடியிருப்பு அருகிலேயே ரேஷன் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தரமான அரிசி வழங்க 700 ஆலைகளில் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க கோடவுன்கள் கட்டப்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு 15 வகை கலரில் சேலைகள், 5 வகை கலரில் வேட்டிகள் வழங்கப்பட உள்ளது என்றார். ஒன்றிய தலைவர் அய்யம்மாள், துணைத் தலைவர் காயத்ரிதேவி, பி. ஆர். ஓ. , நாகராஜ பூபதி, ஒன்றிய செயலாளர் தர்மராஜ் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி