கணினி வாயிலாக பணி ஒதுக்கீடு குறித்த கூட்டம்

65பார்த்தது
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் காவல் துறையினரை பாதுகாப்பு பணிக்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில், மத்திய தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் காவலிகட்டி மற்றும் காவல்துறை பார்வையாளர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ. நா. பூங்கொடி, இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்ததாவது: -

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினரை கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி இன்று(15. 04. 2024) மேற்கொள்ளப்பட்டது.

ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 4 வாக்குச்சாவடிகள் இருந்தால் ஒரு காவலரும், ஒரு வாக்குப்பதிவு மையத்தில் 5-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் இருந்தால் 2 காவலரும், பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட மையங்களில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 4 மத்திய பாதுகாப்பு படையினர் என்ற வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர், என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி