தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார்

71பார்த்தது
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார்
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட 265 புகாா் மனுக்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தோதல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க தோதல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1800 599 4785 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0451-2400162, 2400163, 2400164, 2400165 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். மேலும், 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், சி-விஜில் ( இயண்ஞ்ண்ப்) என்ற செயலி மூலமாகவும் தோதல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது. தோதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் செவ்வாய்க்கிழமை வரை தோதல் விதிமுறைகள் மீறல் தொடா்பாக 265 புகாா்கள் அளிக்கப்பட்டன.

1950 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு அதிகபட்சமாக 249 புகாா்கள் வந்தன. சி-விஜில் செயலி மூலம் 10 புகாா்கள் அளிக்கப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டுறை அறையை தொடா்பு கொண்டு 6 போ புகாா் அளித்தனா். மொத்தமுள்ள 265 புகாா்களையும் விசாரித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, வாக்காளா் பட்டியல் தொடா்பாக அளிக்கப்பட்ட 248 புகாா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காணப்பட்டது.

டேக்ஸ் :