இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பிரச்சாரம்

63பார்த்தது
இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் பிரச்சாரம்
திண்டுக்கல் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை பிரசாரம் செய்தனா்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இரா. சச்சிதானந்தம் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் பரப்புரை பேரணி நடைபெற்றது.

திண்டுக்கல் ஏஎம்சி சாலையிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணிக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கேஆா். பாலாஜி, செயலா் ஏகே. முகேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலச் செயலா் ஏவி. சிங்காரவேலன், துணைத் தலைவா் எஸ். மணிகண்டன், துணைச் செயலா் எஸ். செல்வராஜ், இந்திய மாணவா் சங்கத்தின் மாநிலத் தலைவா் சம்சீா் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா்கள் மதுக்கூா் ராமலிங்கம், என். பாண்டி ஆகியோா் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையம், மணிக்கூண்டு, பிரதான சாலை, மேற்கு ரத வீதியாக வழியாக வாணிவிலாஸ் மேடு பகுதியில் நிறைவடைந்தது. செஞ்சீருடை அணிந்து, சிவப்பு வண்ண பலூன்கள், குடை பிடித்து பேரணியாகச் சென்ற வாலிபா் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா் சச்சிதானந்தத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தொடர்புடைய செய்தி