விளையாட்டு போட்டியில் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா

78பார்த்தது
விளையாட்டு போட்டியில் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா
தேசிய போட்டியில் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது. பீகார் பாட்னாவில் நடைபெற்றபள்ளிகளுக்கு இடையிலான SGFI தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் SMBM மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆர்ட்ஸ் டிரஸ்ட் மாணவன் ஜிதின் அர்ஜுன் நீளம் தாண்டுதல் முதலிடம் 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம், 110 மீட்டர் தடை ஓட்டம் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இன்றுதிண்டுக்கல் ரயில் நிலையம் வந்த மாணவனை பல்வேறு தரப்பினர் வாழ்த்தி பாராட்டு விழா நடத்தினர். இதில் மனிதநேய அமைப்பு தலைவர், மாவட்ட ஹாக்கிசங்க நிறுவனர் ஞானகுரு பேசியதாவது:

மனித வாழ்க்கையில் மனதையும், உடலையும் ஒருங்கிணைத்து வளப்படுத்தக்கூடிய ஒரு அம்சம் இருக்கிறது என்றால் - அது உடற்பயிற்சி. மேலும் விளையாட்டு மட்டும் தான் என்பதை மனித சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் உடற்பயிற்சி, விளையாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். உடல் தகுதியை கடையில் காசு கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் முயற்சித்தால் மட்டுமே உடல் தகுதியை பெற முடியும். நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உங்களுக்கு உதவி செய்கிறது என்பதை குறிப்பாக மாணவர்கள் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி