தவளைகள் தண்ணீரில் வாழ்ந்தாலும் அவை தண்ணீரே குடிப்பதில்லையாம். அதற்கு காரணம் அதன் தோல் ஈரப்பதம் வாய்ந்தது. தோல் மூலமாகவே தனக்கு தேவையான தண்ணீரை தவளைகள் எடுத்துக் கொள்கிறது. தோலில் தண்ணீரை சேமித்து வைப்பதால் தவளைகளால் வறண்ட மற்றும் வெப்பமான சூழலிலும் உயிர் வாழ முடிகிறது. சில தவளைகள் சிறுநீரக திசுக்களிலும், சிறுநீர்ப் பையிலும் தண்ணீரை சேமித்து வைக்கின்றன. இதனால் அவற்றிற்கு வெளியில் இருந்து தண்ணீர் பருக வேண்டிய தேவையில்லை.