நடிகர் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. அந்த வகையில் புதுச்சேரியில் இன்று காலை 10.30 மணிக்கு ராஜா தியேட்டரில் திரைப்படம் திரையிடப்பட்டது. அங்கு குவிந்த ரசிகர்கள் அஜித்குமார் செண்டமேளம், பேண்டுவாத்தியம், நாதஸ்வரம் இசையுடன் ஆட்டம், பாட்டம் என கொண்டாடினர். மேலும், கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர். அதில் ஒரு ரசிகர், கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.