திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் பலவகை பூக்கள் மாதந்தோறும் பூத்துக் குலுங்கும் இதனை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்வது வழக்கம்
இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் அமைந்துள்ள கிளாஸ் ஹவுஸ்( glass house) யில் பலவகையான மலர்கள் பராமரிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது
அதனைத் தொடர்ந்து தற்போது பிகோனியா மலர்கள் பூத்துக் குலுங்குகிறது பிகோனியா மலர்கள் சிவப்பு , இளம் சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் காணப்படுகிறது மேலும் 1500 இனங்களைக் கொண்ட பிகோனியா மலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பிரயண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பிகோனியா மலர்களை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் பிரையன்ட் பூங்காவில் குவிந்து வருகின்றனர்.