தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

66பார்த்தது
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில், வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை ஊராட்சியில் திண்டிமாவனம் குழுவினர் உருவாக்கியுள்ள மியாவாக்கி காட்டில் திண்டிமாவனம் தன்னார்வலர்கள் மற்றும் முதல்நிலை வாக்காளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நேற்று மதியம் 12 மணியளவில் வாக்காளர் உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பேசியதாவது:

கல்லுாரி மாணவ, மாணவிகள் 19. 04. 2024 அன்று வாக்குச்சாவடிக்குச் சென்று தங்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்வதுடன், தங்கள் குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் வாக்களிக்க செய்து, 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்திட ஒத்துழைப்பு அளித்து ஜனநாயகத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும்.

இந்தியாவில் மட்டுமே தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது முதல் வாக்குப்பதிவு செய்வது வரை விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பேசினார்.

தொடர்புடைய செய்தி