கொடைக்கானலில் கள்ளச்சாராய ஊரல் பறிமுதல்.. இருவர் கைது

58பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட எஸ். பி. பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொடைக்கானல் போலீசார் வடகவுஞ்சி அருகே பெருகம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மணிகண்டன் என்பவரது விவசாய நிலத்தில் தேவசியா(71), டின்ஸ்(42) ஆகிய 2 பேரிடமிருந்து 30 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை பறிமுதல் செய்தனர். பின்னர், போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி