நத்தம்: மைக்செட் குடோனில் திடீர் தீ விபத்து

2267பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ். இவர் மைக்செட், கல்யாண, அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். இவர் நத்தம் மீனாட்சிபுரத்தில் குடோன் அமைத்து விழா காலங்களில் பயன்படுத்தப்படும் மைக் செட்டுகள், கூம்பு வடிவ குழாய்கள் மைக் செட் பாக்ஸ்கள் டியூப் லைட்டுகள் டியூப் லைட்டுகள் சீரியல் லைட்டுகள் மற்றும் தளவாடப் பொருள்கள் ஆகியவை மைக் செட் கடையில் வைத்திருந்தார். நள்ளிரவு வரை இருந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் திடீரென குடோனில் தீப்பற்றியது. இதனால் மைக் செட் குடோனில் இருந்த ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீ பிடித்ததற்கான காரணம் பற்றி நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.