இளையராஜா வரிகளில் பாதாள செம்பு முருகனுக்கு பாடல்கள்

63பார்த்தது
இளையராஜா வரிகளில் பாதாள செம்பு முருகனுக்கு பாடல்கள்
இசைஞானி இளையராஜாவின் படைப்பில் திண்டுக்கல் பாதாள செம்பு முருகனுக்கு பாடல்கள் எழுதி இசையமைத்து சிறப்பிக்க உள்ளார். திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவிலுக்கு நாள்தோறும் வெளிநாடு, வெளி மாநிலம் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கருங்காலி மாலைகள் அணிவித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பாதாள செம்பு முருகன் திருக்கோயிலுக்காகஅரோகரா பிலிம்ஸ் வழங்கும் பாடல் வெளியிடப்படுகிறது.

கவிஞர் , பாடலாசிரியர் இசைஞானி இளையராஜா வரிகளில் பாதாள செம்பு முருகனுக்கு ஐந்து பாடல்களும், தாய் வராகி அம்மனுக்கு இரண்டு பாடல்களும் என 7 பாடல்கள் தயாராகி உள்ளன. இந்த பாடல்களை இசைஞானி இளையராஜா எழுதி இசையமைக்க உள்ளார். பாடல்களை பிரபல பாடகர்கள் குரலில் விரைவில் வெளியாக உள்ளது என்பதனை பாதாள செம்பு முருகன் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். அனைவருக்கும் இலவச தரிசனம், திருக்கோவிலில் உண்டியல் இல்லை, தட்டில் காணிக்கை கிடையாது , இலவச வாகன நிறுத்தம், இலவச குளிக்குமிடம் அனைத்தும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி