நத்தம் அருகே ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
நத்தம் நடுமண்டலம் கிராமம் செங்குளம் விரிச்சலாறு பாலம் அருகே ஓடை நீர் நிலை புறம்போக்கு உள்ளது. இங்கு தனிநபர் ஆக்கிரமிப்பு குறித்த புகாரின் அடிப்படையில் நத்தம் வட்டாட்சியர் சரவணக்குமார் முன்னிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த மாமரங்கள் ஜே. சி. பி. இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நத்தம் வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.