நத்தம்: சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்வானது

76பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்ற நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் சஷ்டி விரத நிகழ்ச்சி  நடந்து வருகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும் விழாவின் முக்கிய  நிகழ்வான திருக்கல்யாணம் இன்று  நடைபெற்றது.  

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருக்காட்சி அங்குள்ள கிரிவல பாதையில்   நடைபெற்றது. இதனை தொடர்ந்து 8- ஆம் நாள் முக்கிய நிகழ்வாக மலைகேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகன் , வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட  முருகப்பெருமான் எழுந்தருளி   பொதுமக்களுக்கு காட்சி அளித்தனர் பின்னர் சன்னதி முன்பு வேத மந்திரங்கள் முழங்க முருகன் வள்ளிக்கும், தெய்வானைக்கும், திருமங்கலம் கட்டி புது தம்பதியர் பொதுமக்களுக்கு காட்சி அளித்தனர் இந்த திருகல்யாண விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க திருக்கல்யாண வைபோக நெகிழ்ச்சியானது நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள கம்பளியம்பட்டி,   கோபால்பட்டி, சாணார்பட்டி , செந்துறை, , செங்குறிச்சி, மலைக்கேணி ராஜகாபட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும் ஏராளமானோர்   கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி