நத்தம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

50பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சீரங்கம்பட்டியில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ முத்தாலம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல் நாள் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் லெட்சுமி ஹோமம், மஹாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் வாஸ்துசாந்தி, பூர்ணாகுதி மற்றும் முதல் காலயாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் சதுர்த்தி வார பூஜைகள், இரண்டாம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம், கங்கை, காவேரி, கரந்தமலை அழகர்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. கோவிலை சுற்றி ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்கள் மீது புனித தீர்த்தமும் தெளிக்கப்பட்டது.
பூஜை மலர்களும் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் நத்தம், சீரங்கம்பட்டி, அய்யாபட்டி, காத்தாம்பட்டி, ஊராளி பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி, ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி