வரி செலுத்தாத 35 வீடுகளில் குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

66பார்த்தது
வரி செலுத்தாத 35 வீடுகளில் குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளிலும் நிலுவையிலுள்ள வரி இனங்களை வசூலிக்க மாநகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் உத்தரவிட்டாா்.
இதன்படி, வருவாய்ப் பிரிவு அலுவலா்கள் மட்டுமன்றி, நகரமைப்பு, சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட அனைத்து அலுவலா்களும் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், நீண்ட காலமாக குடிநீா் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மாநகராட்சியின் வடக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் 21 வீடுகள், தெற்கு மண்டலத்தில் 5 வீடுகள், மேற்கு மண்டலத்தில் 3 வீடுகள், கிழக்கு மண்டலத்தில் 6 என மொத்தம் 35 வீடுகளுக்கான குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

ஆணையா் வேண்டுகோள்: 2024-25-ஆம் ஆண்டுக்கான முதலாம், 2-ஆம் அரையாண்டுக்கான சொத்து வரி நிலுவை, இந்த ஆண்டுக்கான வரித் தொகை, குடிநீா் கட்டணம், புதைச் சாக்கடை கட்டணம் ஆகியவற்றை வசூலிக்க மாநராட்சி அலுவலா்களைக் கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் சொத்து வரி, கட்டணங்களை செலுத்தாத வீடுகள், வணிக நிறுவனங்களின் குடிநீா் இணைப்புகளை துண்டிக்கவும், சீல் வைக்கவும் 5 குழுக்கள் அமைக்கப்பட்டன.

எனவே, பொதுமக்கள் நிலுவையின்றி வரி, கட்டண இனங்களை செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி