திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் 12-ஆம் ஆண்டாக சபரிமலை பாதயாத்திரை குழு சார்பில் ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்தது. தொடர்ந்து ஐயப்பனுக்கு அபிஷேகம், தீபாராதனையும், தொடர்ந்து சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அய்யனார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு கிராம தேவதைகளுக்கு கனி மாற்றுதல் மற்றும் தோரணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இருமுடி கட்டி அன்று இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐயப்பன ரத வீதியுலா கோயில் முன்பிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது. பின்னர் குருசாமி முதலில் பூக்குழி இறங்க
100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மணக்காட்டூர் கோயில் நிர்வாகிகள் மற்றும். ஐயப்பபக்தர்கள், ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.