நத்தம் அருகே 100 மதுபாட்டில்கள் பறிமுதல்

53பார்த்தது
நத்தம் அருகே 100 மதுபாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மதுரை சாலையில் உள்ள பள்ளபட்டி பிரிவு பகுதியில் அரசு அனுமதி இன்றி மது விற்பனை நடப்பதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தக வல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் தர்மர் உள்ளிட்ட போலீசார்கள் அந்த பகு தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளபட்டி பிரிவு பகுதியில் மதுக்காரம்பட் டியை சேர்ந்த செல்வம் (வயது 45) என்பவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 100 மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி