கடைகளை மூடி துக்கம் அனுசரிப்பு

2593பார்த்தது
கடைகளை மூடி துக்கம் அனுசரிப்பு
திண்டுக்கல் வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவரும் செயலாளருமாக இருந்த மேடா பாலன் நேற்று காலமானார். திண்டுக்கல் ஆர்யவைஸ்ய சபாவின் முன்னாள் பொருளாளர், முன்னாள் உப தலைவரும், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர், சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளருமான மேடா பாலன் இன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம் என வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இந்த சங்கத்தின் சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. சங்க உறுப்பினர்கள் கருப்பு பேஜ் அணிந்து நேற்று கடைகளை மூடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி