வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

80பார்த்தது
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திண்டுக்கல்ல அனுமதி இல்லாத வாகனத்தில் தேர்தல் விழிப்புணர்வு செய்யப்பட்டது. திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் முடிவுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட பலரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உட்பட பல இடங்களில் விழிப்புணர்வு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் 100% வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டுமென தொடர்ந்து மைக் பிரச்சாரங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் அனுமதி இல்லாமல் போக்குவரத்து போலீசார், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்களால் தடை செய்யப்பட்ட வாகனங்களில் தொடர்ந்து மைக் பிரச்சாரம் செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பூங்கொடி நடவடிக்கை எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி