பறக்கும் படையினரின் வாகன சோதனையினை தேர்தல் அதிகாரி ஆய்வு

79பார்த்தது
பறக்கும் படையினரின் வாகன சோதனையினை தேர்தல் அதிகாரி ஆய்வு
திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்குபடை செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதி வாரியாக பிரித்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையின் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். வாகனங்களை நிறுத்தி தொடர்ந்து சோதிக்கின்றனர்.

இந்நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் வரும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்கு பின்பு நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களை விரட்டி சென்று பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பறக்கும் படையினரின் வாகன சோதனையினை தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான பூங்கொடி இன்று நேரடி ஆய்வு செய்தார்.