தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார்

82பார்த்தது
தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார்
திண்டுக்கல் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 767 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா்கள் 1800 599 4785 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் 0451-2400162, 2400163, 2400164, 2400165 ஆகியவற்றிலும், 1950 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும், சி- விஜில் (இயண்ஞ்ண்ப்) செயலி மூலமாகவும்தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் வெள்ளிக்கிழமை (ஏப். 14) வரை தோ்தல் விதிமுறைகள் மீறல் தொடா்பாக 767 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. 1950 என்ற இலவச தொலைப்பேசி எண்ணுக்கு அதிகபட்சமாக 649 புகாா்கள், சி-விஜில் செயலி மூலம் 42 புகாா்கள், கட்டணமில்லா தொலைப்பேசி எண் மூலம் 29 புகாா்கள் அளிக்கப்பட்டன.

பணம் விநியோகம் செய்யப்பட்டது தொடா்பாக இதுவரை 7 புகாா்கள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி