வேட்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு

3300பார்த்தது
வேட்பாளரின் கார் கண்ணாடி உடைப்பு
திண்டுக்கல் குள்ளனம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50). இவா், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். மனை விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு சொந்தமான அலுவலகம், சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் அருகே கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தோ்தலில் போட்டியிடும் நிலையில், இந்த அலுவலகத்தை தனது தோ்தல் அலுவலகமாகவும் பயன்படுத்தி வருகிறாா்.

சனிக்கிழமை இரவு பிரசாரத்தை முடித்துக் கொண்டு, அலுவலகத்துக்கு வந்த ஆறுமுகம் தனது காரை நிறுத்திவிட்டு, மற்றொரு காரில் வீட்டுக்குச் சென்றாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் அலுவலகத்துக்குச் சென்ற ஆறுமுகம், தான் நிறுத்திச் சென்ற காரின் கண்ணாடி உடைந்திருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளைஞா்கள் இருவா் கண்ணாடியை உடைத்துச் சென்றது தெரியவந்தது. அந்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

தொடர்புடைய செய்தி