அதிமுக மாமன்ற உறுப்பினா் வாக்குவாதம்

1535பார்த்தது
அதிமுக மாமன்ற உறுப்பினா் வாக்குவாதம்
திண்டுக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாமன்றக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயா் ராசப்பா, ஆணையா் ந. ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதையடுத்து, 96 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின்போது நடைபெற்ற விவாதம் வருமாறு: மாமன்ற உறுப்பினா் ஆனந்த் (திமுக): திண்டுக்கல் நகரிலுள்ள திரையரங்குகளில், சினிமா கட்டணம், வாகன நிறுத்துமிட கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், திரையரங்குகளில் குடிநீா் வசதி கூட ஏற்படுத்தவில்லை. இந்த திரையங்குகளின் முன் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றியது தொடா்பான வழக்கில், நீதிமன்றத்தில் வாதிடும் வழக்குரைஞருக்கான கட்டணமாக ரூ. 7, 500 வழங்க மாமன்றத்தில் ஒப்புதல் கோரப்பட்டிருக்கிறது. அந்த பதாகைகள் வைப்பதற்கு முன்பு கட்டணம் வசூலித்திருந்தால் மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்திருக்கும் என்றாா். மாமன்ற உறுப்பினா் சித்திக் (திமுக): வட்டச் சாலை பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் சிமென்ட் சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுகின்றன. இதனிடையே பிரச்னை தொடா்பாக எழுத்துப்பூா்வமாக மனு அளிக்குமாறு அறிவுறுத்திய மேயா் இளமதி கூட்டத்தை நிறைவு செய்தாா்.

தொடர்புடைய செய்தி