உயிரினங்களின் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் தொட்டிகள்

2269பார்த்தது
சிறுமலையில் வன உயிரினங்களின் தாகத்தை தீர்ப்பதற்காக வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணைந்து தண்ணீர் தொட்டிகளை அமைத்து விலங்குகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

தற்பொழுது தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மனிதர்களே தாகத்தை தணிக்க பல்வேறு வகையான குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ள ஆர்வம் காட்டி வரும் நிலையில் மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய உயிரினங்கள் தாகத்தை தீர்க்க தண்ணீர் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் காட்டெருமை, கேளையாடு , குரங்கு, முயல், மயில், அணில் மற்றும் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தற்பொழுது குடிநீருக்கே வழியின்றி சாலைகளில் செல்லும் மனிதர்கள் யாரேனும் ஒருவர் தண்ணீர் தருவார்களா என சாலைகளின் ஓரம் விழிவைத்து காத்திருக்கும் விலங்கினங்களுக்கு உயிரூட்டும் விதமாக திண்டுக்கல் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, சிறுமலை ஊராட்சி ஆகியவை இணைந்து வியாழக்கிழமை காலை 11 மணியளவில் திண்டுக்கல் சிறுமலை சாலையில் விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். 18

தொடர்புடைய செய்தி