பேருந்து முன்பு சாலையில் படுத்து போராட்டம்

56பார்த்தது
சின்னாளப்பட்டி அருகே வேறு ஊராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்வதை கண்டித்து 100-மேற்பட்ட பொதுமக்கள் பேருந்து முன்பு சாலையில் படுத்து போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்த பஞ்சம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறியும், 15-நாட்ளாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறியும், பஞ்சம்பட்டியில் இருந்து பிள்ளையார் நத்தம் ஊராட்சிக்கு வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்கு எந்தவித தகவல் தெரிவிக்காமல் பிள்ளையார்நத்தம் ஊராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக பைப் லைன் அமைக்கப்பட்டு குடிதண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை கண்டித்து சனிக்கிழமை காலை 8. 30 மணியளவில் பஞ்சம்பட்டி ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும், அரசு பேருந்தை மறித்து பேருந்து முன்பாக தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய வட்டார் வளர்ச்சி அலுவலர் மற்றும் சின்னாளபட்டி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி