இரு சக்கர வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

61பார்த்தது
பழனி காந்தி மார்க்கெட் பகுதியில் அதிமுக வேட்பாளர் முகமது முபாரக் இருசக்கர வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற அதிமுக கூட்டணியின் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் பழனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அடிவாரம், பாத விநாயகர் கோவிலில் இருந்து பிரசாரத்தை மேற்கொண்டார். தேவர் சிலை , பேருந்து நிலையம், பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காந்தி மார்க்கெட் வழியாக பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய வேட்பாளர் முகமது முபாரக் அதிமுக ஆட்சியின்போது தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை திமுக நிறுத்தி உள்ளதாகவும், அம்மா ஸ்கூட்டரை திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பதாகவும் , விண்ணை முட்டும் அளவிற்கு விஷமாக விலை ஏறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதில் முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், நகர செயலாளர் முருகாணந்தம், எம்ஜிஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் ரவி மனோகரன் இளைஞரணி மாவட்ட செயலாளர் அண்ணன் அன்வர்தீன் , உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் எஸ் டி பி ஐ , தேமுதிக, உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி